தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கை கொண்டுவருவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் ஆண்டுக்காண்டு மதுவினால் வரும் வருமானம் கூடிக்கொண்டேதான் செல்கிறது என சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் ராமசாமி என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கை மூலம் ஆண்டுக்காண்டு மதுப்பான கடைகளை குறைத்துக்கொண்டு வருகிறோம். தற்போது 5,500 மதுபானக் கடைகள்தான் உள்ளன.
காங்கிரஸின் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறாக உள்ளது. பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் அதிகரித்து வருகின்றன என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ராமசாமி, பாண்டிச்சேரியில் மது விற்பனையை ஆதரிக்கவில்லை. ஆனால், அங்கு பூரண மதுவிலக்கு என தேர்தல் அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவில்லை. நீங்கள்தான் அறிவிப்பை வெளியிட்டீர்கள் என்றார்.
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், பாண்டிச்சேரியில் சூதாட்ட கிளப் கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பாண்டிச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் இளைஞர்களும் சீரழியும் நிலை நிலை ஏற்படும். இதற்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, மக்களின் குடிப்பழகத்தை கட்டுப்படுத்த 5 கோ ரூபாய் நிதி ஒதுக்கி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.