தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, ஊரடங்கு அமலிலுள்ளதாகவும், இதனால், 10ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
எனவே, தள்ளிவைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:
- 01-06-2020 - தமிழ், மொழிப் பாடம்
- 03-06-2020 - ஆங்கில மொழி
- 05-06-2020 - கணிதம்
- 06-06-2020 - பிற மொழிகள்
- 08-06-2020 -அறிவியல்
- 10-06-2020 - சமூக அறிவியல்
- 12-06-2020 - தொழிற்பிரிவுத் தேர்வு
இந்த அட்டவணையின்படி தேர்வு நடைபெறும் எனச் செங்கோட்டையன் அறிவித்தார். மேலும், தள்ளிவைக்கப்பட்ட பதினோறாம் வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2இல் நடைபெறும் என்றும், 23-03-2020இல் நடந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு 04-06-2020 அன்று தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தகுந்த இடைவெளியுடன் தேர்வுகளை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்த செங்கோட்டையன், பள்ளித் திறப்பு குறித்து தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது: திக தலைவர் கி.வீரமணி கண்டனம்