ETV Bharat / city

கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்; தமிழ்நாடு அரசு - அறங்காவலர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்,
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Dec 8, 2021, 4:58 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள விஜய வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை ஏலம் மூலம் குத்தகைக்கு விட நவம்பர் மாதம் 24ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகன்நாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர்கள் இல்லாத நிலையில் கோயில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அதிக சொத்துகளை உடைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், ஏல நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் அறங்காவலர் நியமனம் செய்யப்படும் வரை இறுதி செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கோயில் நகைகள் அறங்காவலர்கள் நியமனத்துக்கு பிறகு உருக்கப்படும்- தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.