சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் மு.க. ஸ்டாலினை, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஸ்டாலின் தமிழிசைக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை, "தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதன்முதலாக தமிழ்நாடு வந்தேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தொடர்ந்து புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், கோதாவரி திட்டம் குறித்து ஸ்டாலினிடம் கூறினேன். தமிழ்நாடு, புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாராட்டும்விதமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
சந்திப்பிற்குப் பிறகு ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இன்று கூடுகிறது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்