ETV Bharat / city

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து - ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு - பொதுத் தேர்வு ரத்து

சென்னை: 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்துள்ளதற்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

EXAMS
EXAMS
author img

By

Published : Feb 5, 2020, 12:14 PM IST

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தப்படாத, ஏன் மத்திய அரசு பள்ளிகளிலேயே கூட அமல்படுத்தாத 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, இந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. ஏழை, எளிய மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்கின்ற வகையில் பொதுத்தேர்வு அறிவிப்பு பேரிடியாக இருந்தது.

இதற்கு ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் திடமான எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் வரை பொதுத்தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்த பள்ளிக் கல்வித் துறை நேற்று அந்த முடிவை கைவிட்டு இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை அறிவிப்புகளை வெளியிடுவதும், பின் எதிர்ப்புகள் வந்தவுடன் ரத்து செய்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

அந்த வாடிக்கையில் பெரிய வாடிக்கையாக பள்ளிக் கல்வித் துறை 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை திரும்பப் பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும் மாணவர் நலன் சார்ந்து பள்ளிக் கல்வித் துறை எடுத்திருக்கும் இந்த முடிவை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது.

வரும் காலங்களில் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுகளை வெளியிடும் முன், அந்த உத்தரவால் ஏற்படப்போகும் சாதகபாதகங்களை நன்கு ஆராய்ந்து, குறிப்பாக ஆசிரியர்களிடமும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடமும் கருத்துகளைக் கேட்ட பின் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதனை வரவேற்று, தமிழ்நாடு அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் மூலம் பாதித்துள்ள 5,400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான வழக்கு, ஒழுங்கு நடவடிக்கையையும் அரசு ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - செங்கோட்டையன் அறிவிப்பு

Intro:

5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வு
ஆசிரியர்கள் வரவேற்பு Body:

5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வு
ஆசிரியர்கள் வரவேற்பு
சென்னை,

ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தும் முடிவை  பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளதற்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத நிலையில் ஏன் மத்திய அரசு பள்ளிகளிலேயே அமல்படுத்தாத நிலையில் ஐந்து  மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை இந்த கல்வியாண்டின் இடையில் நவம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. ஏழை எளிய மாணவர்கள்  முதல் தலைமுறை மாணவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கின்ற வகையில்  பொதுத்தேர்வு அறிவிப்பு பேரிடியாக இருந்தது. 
இதற்கு ஆசிரியர்கள் , பொதுமக்கள், மாணவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்   மத்தியில் எழுந்த  எதிர்ப்புகள்  என பல்வேறு தரப்பில் இருந்து திடமான  எதிர்ப்புகள் வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வரையில் பொதுத் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்த பள்ளிக்கல்வித்துறை நேற்று அந்த முடிவை கைவிட்டு இருக்கிறது.

பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை தினம்தினம்  அறிவிப்புகளை  வெளியிடுவதும் அந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்புகளும்  விமர்சனங்களும் வரும் பட்சத்தில் அந்த அறிவிப்புகளை ரத்து செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.அந்த வாடிக்கையில் பெரியவாடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை திரும்பப் பெற்றுள்ளது.
எது எப்படி இருந்தாலும் மாணவர் நலன் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை எடுத்திருக்கும் இந்த முடிவை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது.

வரும் காலங்களில் பள்ளிக்கல்வித்துறைஉத்தரவுகளை  வெளியிடும் முன் அந்த உத்தரவால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை நன்கு அலசி ஆராய்ந்து குறிப்பாக ஆசிரியர்களிடமும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடமும் கருத்துக்களை கேட்டு ஆலோசனைகளை பெற்று  பின் வெளியிட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர், துணை முதலமைச்சர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 5 மற்றும் 8 ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்படும் என அறிவித்துள்ளார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதனை வரவேற்கிறது. தமிழக அரசிற்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறது.
இதேபோல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் மூலம் பாதித்துள்ள 5400க்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான வழக்கு, ஒழுங்கு நடவடிக்கையையும் ரத்து செய்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.