சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் மணலூர்பேட்டையைச் சேர்ந்த சு.செல்வம். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரஷ் பயன்படுத்தாமல் வெறும் செடியை வைத்து அப்துல் கலாம், விவேக் ஆகியோர் படங்களை வரைந்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவுகளில் ஒன்றான மரம் வளர்ப்புப் பற்றி நடிகர் விவேக்கிடம் கூறினார். விவேக் தன் உயிர் மூச்சு இருக்கும் வரை ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டார்.
அதனால், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்பு பற்றியும், மரத்தின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரஷிற்கு பதிலாக செடியை வைத்து அப்துல் கலாம், விவேக் ஆகியோர் படங்களை சு.செல்வம் வரைந்தார்.
இதையும் படிங்க: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் நின்றபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு!