சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் நேற்று (மார்ச் 22) தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். இரண்டு காரில் நடத்திய சோதனையில் ஆறு கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அது டாஸ்மாக் பணம் என்பதும் தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணம் அவர்களிடம் இல்லாததால், பறக்கும் படையினர் பணத்தைக் கைப்பற்றி எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் வருமானவரித் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமானவரித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திய பின்னர் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகத் தேர்தல் பறக்கும் படை அலுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.5.5 லட்சம் பணம் பறிமுதல்!'