சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 16ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 36 ஆயிரத்து 46 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 72 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரத்து 920 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 34 லட்சத்து 52 ஆயிரத்து 145 நபர்கள் கரோனா தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 873 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 161 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 248 என உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் மேலும் புதிதாக சென்னையில் 23 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 7 நபர்களுக்கும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.