ETV Bharat / city

டான்செட் 2022 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

2022-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET)-க்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் (18-4-2022) கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வரும் 21-ம் தேதி மாலை 4 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

டான்செட்
டான்செட்
author img

By

Published : Apr 19, 2022, 8:08 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான, தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TAMIL NADU COMMON ENTRANCE TEST - TANCET), மே 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு மே 14-ம் தேதியும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கு மே 15-ம் தேதியும் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது.

டான்செட் தேர்வுக்கு, மார்ச் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பம் தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஏப்ரல் 18-ம் தேதி வரையில், எம்.பி.ஏ. படிப்பிற்காக 17 ஆயிரத்து 673 பேரும், எம்.சி.ஏ படிப்புக்காக 6 ஆயிரத்து 912 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க். எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான தேர்வினை எழுத 5 ஆயிரத்து 457 பேரும் என மொத்தம் 30 ஆயிரத்து 42 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 21-ம் தேதி மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.