ETV Bharat / city

ஆளுநரை திரும்பப் பெற சொல்ல அதிமுகவுக்கு துணிச்சல் இருக்கிறதா? - வேல்முருகன் கேள்வி - தமிழ்நாடு ஆளுநர்

சென்னை: ஏழு பேர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த இந்த ஆளும் அதிமுகவால் முடியுமா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

வேல்முருகன்
author img

By

Published : Jul 12, 2019, 1:28 PM IST

மத்திய அரசின் தொடர் தமிழர் விரோத போக்கை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் பின் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன்,

மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தமிழ் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் திணிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் திணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகத்தில் முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஏழு பேர் விடுதலை என்பது முதலமைச்சர் கூறுவது போல் தனிநபருக்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லை.

வேல்முருகன் பேட்டி

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இதே ஏழு பேர் விடுதலைக்கு தீர்மானத்தை நிறைவேற்றினார். அவர்களின் வழியாக ஆட்சி செய்கின்ற அரசு என்று கூறும் இவர்கள், இந்த ஏழு பேர் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். அவரை வைத்துகொண்டு எங்களால் ஆட்சி செய்ய முடியாது என்று சொல்வதற்கு எடப்பாடிக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

Intro:Body:மத்திய அரசின் தொடர் தமிழர் விரோத போக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "மத்திய மோடி அரசும், தமிழக முதலமைச்சர் அடிமை எடப்பாடி அரசும் சேர்ந்து தமிழ் விரோத, தமிழ் மக்கள் விரோத சட்டங்களையும் மக்கள் விரோத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நீட் திணிக்கப்பட்டுள்ளது, ஜி.எஸ்.டி, எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் திணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு இந்தி பேசும் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். வங்கிகளில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது, தேசிய நெடுஞ்சாலைகள் முதற்கொண்டு பேருந்துகள் வரை தமிழ் அழிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகள் இல்லை. சொந்த நாட்டில் தமிழர்களுக்கு வேலை இல்லை. தமிழ் மொழியின் கலாச்சாரத்தை அழித்தொழிக்கிற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. இநேநிலையில் இலண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகத்தில் முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

ஏழு பேர் விடுதலை என்பது முதல்வர் கூறுவது போல் தனிநபருக்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதே ஏழ்வர் விடுதலைக்கு தீர்மானத்தை நிறைவேற்றினார். அவர்களின் வழியாக ஆட்சி செய்கின்ற அரசு என்று கூறுகிறர்கள். அப்படியென்றால் அந்த ஏழ்வர் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும், அவரை வைத்துகொண்டு எங்களால் ஆட்சி செய்ய முடியாது என்று சொல்வதற்கு எடப்பாடிக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கேள்வி" என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.