சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, நகரம் எங்கும் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் ₹217.96 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்து உள்ளது.
குறிப்பாக பெருநகரங்களான,
சென்னை மண்டலத்தில் ₹50.04 கோடி ரூபாய்க்கும்
திருச்சி மண்டலத்தில் ₹42.59 கோடிக்கும்
மதுரை மண்டலத்தில் ₹43.20 கோடிக்கும்
கோவை மண்டலத்தில் ₹41.28 கோடிக்கும்
சேலம் மண்டலத்தில் ₹40.85 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் விற்பனை நடந்து உள்ளது.
இன்று விடுமுறை என்பதால் நேற்றே பலர் மதுபானப்பாட்டில்களை வாங்கிப் பதுக்கி வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க:Liquor sale in Pollachi: பொள்ளாச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி மதுபான விற்பனை ஜோர்