ETV Bharat / city

10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்- தனியார் பள்ளிகள் முதலிடம் - தனியார் பள்ளிகள் முதலிடம்

10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்- தனியார் பள்ளிகள் முதலிடம்

author img

By

Published : Jun 20, 2022, 2:21 PM IST

சென்னை :10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதில் கடந்த 2019 ஆம் ஆண்டைக் காட்டிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 5 சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் அரசுப்பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 98.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பாெதுத்தேர்வை 12,714 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் 90.07 தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவர்கள். 3,94,920 பேரும், மாணவிகள் 4,27,073 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவியர் 8.55சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வருகை புரியாத மாணவர்கள் : மேலும் பொதுத் தேர்வை எழுதுவதற்கு 42 ஆயிரத்து 519 மாணவர்கள் வரவில்லை. இது மொத்த விகிதத்தில் 4.45 சதவீதம் ஆகும். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வினை எழுத 20 ஆயிரத்து 53 மாணவர்கள் 2.09 சதவீதம் வரவல்லை. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வினை 9 லட்சத்து 37 ஆயிரத்து 859 மாணவர்கள் எழுதியதில், 8 லட்சத்து 92 ஆயிரத்து 521 மாணவர்கள் 95.2 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் : அரசு பள்ளிகள் 85.25 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 89.01 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 90.37 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதம் மற்றும் ஆண்கள் பள்ளிகள் 79.33 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

நூற்றுக்கு நூறு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கில பாடத்தில் 45 மாணவர்களும், கணித பாடத்தில் 2186 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 3841 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 மாணவர்களும் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாற்றுதிறனாளிகள் மாணவர்கள் 6016 பேர் எழுதியதில் 5424 பேர் 90.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 242 பேர் எழுதியதில் 133 பேர் 54.95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4006 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 886 பள்ளிகளில் படித்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:குறைந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. அதிகரித்த 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.