ETV Bharat / city

நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் - எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

சென்னை: மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்ததை உறுதி செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

mubarak
mubarak
author img

By

Published : Apr 15, 2020, 2:11 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், இரண்டாவது முறையாக மே 3 வரை 19 நாட்கள் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். முதல் ஊரடங்கை திட்டமில்லாமல் செய்ததன் விளைவாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் துயரத்தில் சிக்கித் தவித்ததும், பசி பட்டினியால் அவதிப்பட்டதும் அன்றாட செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், மீண்டும் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள பிரதமர் மோடி, கரோனா வைரசை எதிர்கொள்ள சில அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்கியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் எதையும் பிரதமர் அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

இதனால் வேலையின்றி பட்டினியால் வாடும் தொழிலாளர்களின் துயர் துடைக்க அவர்களுக்குப் போதுமான அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் சிரமமின்றி கிடைத்திட அவசரமான நடவடிக்கைகளை அரசுகள் எடுத்திட வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்த நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்ததை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருக்கும் விஜயபாஸ்கருக்கும் பனிப்போரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.