ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 1,556 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 556 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

Corona
Corona
author img

By

Published : Sep 6, 2021, 10:59 PM IST

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 609 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆயிரத்து 556 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 23 லட்சத்து 76 ஆயிரத்து 881 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து 24 ஆயிரத்து 234 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 256 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 564 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 72 ஆயிரத்து 942 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 12 நோயாளிகளும் என 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 036 உயர்ந்துள்ளது.

சென்னையில் 169 நபர்களுக்கும் கோவை மாவட்டத்தில் 206 நபர்களும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.