மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, "கரோனா வைரஸை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைத்து வேலை செய்து வரும் நிலையில் அது ஒருவருக்கு மட்டும் பிடிக்கவில்லை என்றால், அது திமுக தலைவர் ஸ்டாலினுக்குத்தான்.
மீண்டும் 2021இல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற அச்சத்தில், திமுக தலைவர் குறைக் கூறி திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலின் அனுப்பும் அறிக்கைகள் அனைத்தும் பிரசாந்த் கிஷோர் மூலமே வருகிறது.
கரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலமைச்சரின் ஆலோசனை படி தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இது போன்று தான் மத்திய அரசு தலைமையிலும், மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகின்றன. இதை கொச்சைப்படுத்தி ஸ்டாலின் விமர்சிப்பது கேலியாக உள்ளது. மஞ்சள் துண்டு அணிந்த கட்சிக்கு காண்பதெல்லாம் மஞ்சள் போன்றுதான் தெரியும்.
எதிர்க்கட்சிகள் அரசுடன் கைகோர்த்து கரோனாவை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் அதில் அரசியல் செய்து வருகிறார். மாநிலத்தில் கரோனா முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் இன்னும் இரண்டாம் நிலையில் தான் உள்ளோம்", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு: அரசு அறிவித்த தளர்வுகள், விதிமுறைகள் என்ன?