ETV Bharat / city

திக போல் திமுக மாறிவிடும் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் - அதிமுக

சென்னை: தேர்தலைக் கண்டு திமுக இப்படியே பயப்படுமானால் 2021 தேர்தலில் திராவிடர் கழகம் போல் திமுக மாறிவிடுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar
author img

By

Published : Dec 16, 2019, 3:47 PM IST

ராயபுரத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள எட்டு மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரத்து 935 பேருக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் அமைச்சரின் சார்பில் புடவையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மாநகராட்சி துணை ஆணையர் மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

” வறுமையில் வாடும் பெண்களுக்காக தாலிக்குத் தங்கம் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 8 கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாயும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

கராத்தே தியாகராஜனும், தமிழருவி மணியனும் வரிந்துக் கட்டிக்கொண்டு ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் 2021 இல் கூட கட்சி ஆரம்பிப்பது சந்தேகமாகத்தான் உள்ளது.

தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவும் இல்லை. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் கட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவரைத்தான் கட்சியின் தலைவராக அக்கட்சித் தொண்டர்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்தான் உண்மையான தலைவராக முடியும். திமுகவிற்கு தேர்தல் என்பதே பிடிக்காத வார்த்தையாகிவிட்டது . இதே நிலைமை நீடித்தால் 2021இல் திராவிடர் கழகம் போல் திமுக மாறிவிடும். மீனவர் மீதான தாக்குதல், காவிரி நீர், கச்சத்தீவு போன்ற பிரச்சனைகளில் மத்திய அரசிடம் திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பிரச்னையில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறோம் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: ' ஸ்டாலின் காந்தியும் இல்லை; நான் புத்தனும் இல்லை ' - எகிறிய அமைச்சர் சி.வி. சண்முகம்

Intro: 2021ல் திராவிட இயக்கம் போல் திமுக மாறிவிடும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

Body: சென்னை இராயபுரம் தனியார் பள்ளியில் 8 மண்டலத்திற்கு உட்பட்ட தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்

சென்னையில் உள்ள எட்டு மண்டலத்திற்கு உட்பட்ட ஆயிரத்து 935 பேருக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் அமைச்சரின் சார்பில் புடவையும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி மாநகராட்சி துணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

திருமணத்திற்கு கஷ்டப்படும் குடும்பத்தினருக்காக தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது பிளஸ் டூ முடித்தவர்கள் 8 கிராம் தங்கமும் ரூபாய் 25 ஆயிரம் பணமும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் 50 ஆயிரமும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது

ரஜினி நடவடிக்கை சந்தேகமாகவே உள்ளது 2021ல் கூட அவர் கட்சி ஆரம்பிப்பது சந்தேகமாக தான் உள்ளது கராத்தே தியாகராஜன் தமிழருவி மணியனும் வரிந்து கட்டிக்கொண்டு ரஜினிகாந்தை எப்படியாவது அரசியல் எனும் நிலைக்கு கொண்டு வரவேண்டுமென்று கருத்தை முன்வைக்கின்றனர்

தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவும் இல்லை

திமுக கார்ப்பரேட் செக்டார் போல செயல்படுகிறது பிரசாந்த் கிஷோர் தான் அந்தக் கட்சியின் தலைவராக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவரை உண்மையான தலைவராக வரமுடியும்

இன்றைக்கு கூட சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அவர்கள் ஸ்டாலினுக்கு வீணாக வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள் நாங்கள் கிளற ஆரம்பித்தோம் என்றால் தனிப்பட்ட வாழ்க்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவு மோசமானவர் என்பதெல்லாம் வெளியே வரும் என்று எச்சரித்திருந்தார் அதுபோல வீணாக வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன் கட்சி ரீதியாக மோதினாலும் நாங்கள் மோதும் தனிப்பட்ட ரீதியில் பத்திரிக்கையில் எழுதி மோதினாலும் நாங்கள் மோதுவோம் .

உதயநிதி ஸ்டாலின் சொல்லமறந்தகதை ஆக உள்ளார் அவருக்கு நடந்த கதையை சொல்லி தெரிய வைக்க வேண்டும் அனைத்தும் தெரிந்துகொள்ள அவர் ரூம் போட்டு அவருடைய தாத்தா என்ன செய்தார் என்பதை யோசிக்க வேண்டும்

குடியுரிமை மசோதாவில் எந்த மக்களுக்கும் பிரச்சினை இல்லை இலங்கை தமிழருக்கு இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருகிறோம்

திமுகவினருக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல் இந்த நிலைமை இப்படியே நீடித்தால் 2021ல் திராவிட இயக்கம் போல் திமுக மாறிவிடும்

பதவியை பற்றி கவலைப்படாமல் மக்கள் தேவையை நிறைவேற்றிய கட்சி அதிமுக

மீனவர்கள் தாக்குதல் காவிரிநீர் கச்சத்தீவு போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசிடம் திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை

என்று செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் கூறினார்

Conclusion:தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பெண்களுக்குத் தங்கம் வழங்கும்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.