ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 38 பேருக்கு கரோனா; எண்ணிக்கை 1242ஆக உயர்வு! - விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar press meet, tn corona update
vijayabaskar press meet
author img

By

Published : Apr 15, 2020, 6:46 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஏப்ரல் 15) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து கரோனா குறித்த முதன்மைத் தகவல்களை தெரிவித்தார்.

அதில்

  • இன்றைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38
  • இதில் 34 பேர் ஒரே இடத்திற்குச் சென்று வந்தவர்கள், மூன்று பேர் வேறு நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஒருவர் மருத்துவர்
  • இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 118ஆக உள்ளது.
  • இன்று மட்டும் இருவர் உயிரிழப்பு, ஒருவருக்கு 47 வயது; மற்றொருவருக்கு 59 வயது. மொத்த உயிரிழப்பு 14ஆக உயர்வு

மேலும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 994. இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 835 என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.