ETV Bharat / city

விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Jul 31, 2020, 4:50 PM IST

சென்னை: பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு மைதானங்களை திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

assembly
assembly

ஊரடங்கு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஏழாம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • ஊரடங்கு உத்தரவானது, ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு. ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் ஏதுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
  • பொது இடங்களில் மது அருந்துவது, குட்கா, பான்மசாலா பயன்படுத்தி எச்சில் துப்புவதற்கு தடை. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்.
  • திருமண நிகழ்வுகளில் 50 பேர், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
  • தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
  • தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்குவதற்கான தடை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தொடரும்.
  • அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி. இரவு 9 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
  • ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள சிறிய கோவில்கள், சிறிய மசூதி, தர்காக்கள், தேவலாயங்களில் மட்டும் தரிசனத்திற்கு அனுமதி.
  • காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி.
  • அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் (E-Commerce) மூலமாக வழங்க அனுமதி.
  • ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருதல் ஆகியவற்றிற்கு E-pass பெற வேண்டும்.
  • ஆகஸ்ட் 15ஆம் தேதி, தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து விடுதலை நாள் விழா கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு இலவச சந்தன கட்டைகளை வழங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.