சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல் பேரவைக்கூட்டம் நேற்று முன்தினம் (ஜன.5) ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்றுடன் (ஜன.7) நிறைவடைகிறது.
பேரவையில் வினா விடை நேரத்தின் போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில் பேரவையில் இன்று அரசுத் தேர்வுகளுக்கான புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
அதன்படி, அரசு தேர்வுகள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்ற சட்டம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்கள் அனைத்தையும் இனி டிஎன்பிஎஸ்சி (TNPSC) மட்டுமே மேற்கொள்ளும் வகையில் சட்டதிருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துவிட்டது - அமைச்சர் சக்கரபாணி