ETV Bharat / city

விநாயகர் சதுர்த்தி விழா: கோலாகலமான தமிழ்நாடு... களைகட்டிய கொண்டாட்டம்!

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதிலும் இவ்விழாவை மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா
author img

By

Published : Sep 2, 2019, 8:25 PM IST

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழா தமிழ்நாட்டிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்டவை படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விநாயகரை வழிபடக் காலையிலே மக்கள் அழகழகான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வாங்கிச் சென்று வழிபட்டனர்.

கும்பகோணத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், விநாயகர் வேடமிட்டு ஆடிப்பாடி இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து விநாயகர் சிறப்பை விளக்கும் பாடல்களுக்குப் பரதநாட்டியமும், மாணவர்கள் நடனம் ஆடியும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

திருவள்ளூரில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிக பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வீரராகவர் கோவில் பின்புறம் வைத்துள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் விநாயகர் சிலைகள் விநாயகருக்குப் படையல் செய்ய வேண்டிய மங்கலப் பொருட்களின் விற்பனை அமோகமாக இருந்தது. விநாயகர் பூஜைக்குப் பிரதானமான வாழைப்பழத்தின் விலை உயர்வால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நீலகிரி, குன்னூரில் 1,008 விநாயகர் சிலைகள் வைத்து 1,008 முறை வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதில் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Intro:தஞ்சாவூர் செப் 02

இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளியில் மாணவர்கள் விநாயகர் வேடமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்Body:

தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் விநாயகர் வேடமிட்டு ஆடிப்பாடி இவ்விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை புறவழிச்சாலையில் உள்ள அந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்டவை படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து விநாயகர் சிறப்பை விளக்கும் பாடல்களுக்கு பரதநாட்டியம், மற்றும் மாணவர்கள் நடனம் ஆடி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.