ETV Bharat / city

சுற்றுச்சூழல் துறை ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் கருப்பணன் பங்கேற்பு!

சென்னை: சுற்றுச்சூழல் துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கருப்பணன் தலைமையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

karupanan
karupanan
author img

By

Published : Mar 4, 2020, 7:26 PM IST

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தலைமையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம், கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தலைவர், சுற்றுச்சூழல் துறை உறுப்பினர் செயலர் மற்றும் இயக்குநர், வாரிய, மண்டல மற்றும் மாவட்டப் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் கேட்டறியப்பட்டது. மேலும் வரும் 11ஆம் தேதி சட்டப்பேரவையில் நடக்கவுள்ள சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை அன்று அறிவிக்கப்படவுள்ள அறிவிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள் நல்ல முறையில் தொடர்ந்து இயங்குகின்றனவா என்றும், அவற்றைக் கண்காணித்து நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடாமல் பாதுகாக்க வாரிய அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டுமெனவும் அமைச்சர் கருப்பணன் அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க: தி.மு.க.விற்கு இனி எதிர்காலமே கிடையாது: செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.