ETV Bharat / city

காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே வாக்குப்பதிவு - கட்சிகள் வலியுறுத்தல்

வாக்குப்பதிவு நேரம் எந்தச் சூழலிலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை மணி என்ற அளவில்தான் இருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைய கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கைவைத்துள்ளன.

author img

By

Published : Sep 6, 2021, 8:09 PM IST

tn election all party meeting, தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டம், தமிழ்நாடு தேர்தல் ஆணையம், all party meeting, local body elections
tamilnadu election commission

சென்னை: ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான தேதியை முடிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

வார்டு மறுவரை உள்ளிட்ட காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் ஏற்பாடு, தேதி உள்ளிட்டவை குறித்து முடிவுசெய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்க, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மாநிலத் தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, தேர்தல் அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, தேமுதிக, தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

முக்கியக் கோரிக்கைகள், முடிவுகள்

  • காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவு
  • கரோனா தொற்றுப் பரவலைக் கருத்திற்கொண்டு கூடுதல் வாக்குப்பதிவு மையங்களை அமைக்க வேண்டும்
  • வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா, மூன்றடுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
  • சுதந்திரமான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்திட அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. 1996-2001, 2006-2011 காலங்களில் திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது வரலாறு காணாத அளவுக்கு வன்முறை நடைபெற்றது. இந்த முறை சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

வாக்குப்பதிவு நேரம் எந்தச் சூழலிலும் காலை 7 மணி முதல் மாலை 6 வரை மணி என்ற அளவில்தான் இருக்க வேண்டும். காலை 7 முதல் மாலை 7 வரை என்று அளவில் இருக்கக் கூடாது என வலியுறுத்திஉள்ளோம். அனைத்துக் கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டு வலியுறுத்தியுள்ளது.

திமுக சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன்

கரோனா பேரிடர் காலம் என்பதால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம். பதற்றமான சாவடிகளில் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் எடுக்கும் முயற்சிகளுக்கு, திமுக முழு ஒத்துழைப்பைத் தரும்.

பாஜக கராத்தே தியாகராஜன்

வாக்குப்பதிவு நேரத்தை 7-5 என்று மாற்றி அமைக்க கோரிக்கைவிடுத்துள்ளோம். ஒன்பது மாவட்ட வாக்காளர் விவரங்களைப் புகைப்படத்துடன் இணையதளத்தில் வெளியிட கோரிக்கைவிடுத்துள்ளோம்.

வார்டு மறுவரையரை செய்த பின் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு புதிய மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிதாக உருவாகியுள்ள மாநகராட்சியில் இணையும் ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்துள்ளது.

பதற்றமான சாவடிகளில் உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதிசெய்ய வேண்டும். தேர்தலுக்கு பாஜக முழு ஒத்துழைப்பைத் தரும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன்

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் அலுவலர்கள் மட்டுமின்றி வாக்காளர் உள்பட அனைவரும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு 7-6 என்றுதான் இருக்க வேண்டும். சிறுபான்மை மக்கள், பழங்குடியினர், பட்டியலின மக்கள் வசிக்கின்ற இடங்களிலேயே வாக்குப்பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

தேமுதிக - பார்த்தசாரதி

பட்டியலினத்தவர்கள், ஆண் - பெண் ஆகியோருக்கு தொகுதிகள் வரையறுக்கப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம்.

ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து உள்ளாட்சிகளுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.