ETV Bharat / city

பாதுகாப்புப்படை விலக்கலில் உள்நோக்கமில்லை - ஓபிஎஸ் கருத்து - withdraw

சென்னை: மத்தியப் பாதுகாப்புப் படை விலக்கிக்கொள்ளப்பட்டதில் எந்த உள்நோக்கமுமில்லை என தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

security
security
author img

By

Published : Jan 10, 2020, 1:30 PM IST

Updated : Jan 10, 2020, 2:27 PM IST

மதுரை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உள் துறை அமைச்சகத்தின் மூலம் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுவந்தது. எனக்கு பாதுகாப்புத் தேவையில்லை எனக் கருதியதால் தற்போது அது விலக்கப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் ஏதுமில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றில் அதிமுகவின் உறுதியான நிலைப்பாடு, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களான இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு சிறு இடர்பாடுகூட வராமல் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளோம்.

’எனக்கு பாதுகாப்புத் தேவையில்லை எனக் கருதியதால் விலக்கப்பட்டுள்ளது’

களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் அலுவலரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், உதவிகள் அரசின் சார்பில் செய்யப்படும். இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கை காப்பதிலும், நிர்வாகத் திறமையிலும் தமிழ்நாடு முதல்நிலையில் இருப்பதை மத்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.

ஆங்கிலோ இந்தியர்களுக்கு சட்டப்பேரவையில் தொடர்ந்து பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. இது பற்றி மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பரிசீலிப்பதாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுவந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ்' - கனிமொழி கொந்தளிப்பு

Intro:தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Conclusion:
Last Updated : Jan 10, 2020, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.