சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மார்ச் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 84 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 37 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 415 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 751 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 339 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த 64 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 387 என உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இறக்காததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என உள்ளது.
சென்னையில் அதிகரிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக 20 நபர்களுக்கும், செங்கல்பட்டில் நான்கு நபர்களுக்கும் கோயம்புத்தூர்,திருவள்ளூரில் தலா மூன்று நபர்களுக்கும், நீலகிரியில் 2 நபர்களுக்கும், திண்டுக்கல் கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என 37 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கும் நோய்த்தொற்றுப்பாதிப்பு கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் பரிசோதனை செய்பவர்களும் எண்ணிக்கையில் நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 0.1 என உள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில் 0.56 பாதிப்பு இருந்து வருகிறது.
இதையும் படிங்க:பருத்தி பஞ்சு பதுக்கல்..பியூஷ் கோயலைச் சந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்