இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம்
ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீரை
சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: கடலூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்