சட்டப்பேரவையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, முதலமைச்சருக்கு யார் டெண்டர் போடுவார்கள் என்பதே தெரியவில்லை. அவரை கோபக்காரர் என்றுதான் நினைத்தேன், நகைச்சுவையானவர் என்பது இப்போதுதான் தெரிகிறது என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “டெண்டர்கள் அனைத்தும் இ-டெண்டர் மூலமாகவே கொடுக்கப்படுகிறது. உங்கள் ஆட்சிக்காலத்தில் டெண்டர்கள் எப்படி விடப்பட்டன என்பது எனக்குத் தெரியும். என்னிடம் லிஸ்ட் உள்ளது. வெளியே சொல்ல வேண்டாம் எனப் பார்க்கிறேன். எங்களது ஆட்சியில் டெண்டர் பணிகள் நேர்மையாக நடைபெறுகின்றன“ எனக் கூறினார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய தங்கம் தென்னரசு, அரசு டெண்டர்கள் குறிப்பிட்ட ஐந்து நபர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது எனப் புகார் கூறினார்.
இதற்கு முதலமைச்சர், ”டெண்டர்கள் அனைத்தும் இணையதளம் மூலமாகத் தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. யாருக்கு டெண்டர் வழங்கப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. திமுக ஆட்சிக்காலத்தில்தான் அவர்களுக்குத் தேவையான ஒரு நபருக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:950 கோடியில் 4,865 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி