ETV Bharat / city

தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சி - முதல்வரிடம் பாஜக மனு

சென்னை: அமைதிப்பூங்காவாக உள்ள தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சிலர் திட்டமிட்டுவருவதாக பாஜக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

complaints
complaints
author img

By

Published : Feb 3, 2020, 2:26 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்போர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியும், படுகொலைசெய்தும், பயமுறுத்தும் வேலைகள் நடைபெற்றுவருவதாகக் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் இன்று பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், கருப்பு முருகானந்தம், வினோஜ் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

முதலமைச்சரை சந்தித்தப் பின், செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திரன், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக காவல் துறையில் புகாரளித்தும் எங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் விஜய் ரகு கொலைசெய்யப்பட்டதை ’லவ் ஜிகாத்’தாகத்தான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அமைதிப்பூங்காவாக உள்ள தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற சிலர் திட்டமிட்டுவருகின்றனர். நாங்கள் அளித்த மனு தொடர்பாக உடனடியாக கவனிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் “ என்று கூறினார்.

தமிழகத்தை கலவர பூமியாக்க முயற்சி - முதல்வரிடம் பாஜக மனு

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

Intro:Body:*அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தை கலவரப்பூமியாக மாற்ற சிலர் திட்டமிட்டு வருகின்றனர் என பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்..*

குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரிப்போர் மீது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியும், படுகொலை செய்தும் பயமுறுத்தும் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியை தலைமைச்செயலகத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், கருப்பு முருகானந்தம், வினோஜ் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அதன் பின்பு நரேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.

மேலும் இதுதொடர்பாக காவல்துறையில் புகாரளித்தும் எங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் விஜய் ரகு கொலை செய்யப்பட்டுள்ளது லவ் ஜிகாத்தாக தான் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ரவீந்தரநாத் மீது கூட தாக்குதல் நடைபெற்றுளது. எம் பி மீது தாக்குதல் நடத்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பிய அவர்கள்,

அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தை கலவரப்பூமியாக மாற்ற சிலர் திட்டமிட்டு வருகின்றனர். நாங்கள் அளித்த மனு தொடர்பாக உடனடியாக கவனிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.