ETV Bharat / city

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆளுநர் மாளிகை எதற்கு?- விசிக கேள்வி!

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆளுநர் மாளிகை எதற்கு என சட்டப்பேரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி கேள்வி எழுப்பினார்.

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆளுநருக்கு மாளிகை எதற்கு?- விசிக கேள்வி!

author img

By

Published : Apr 26, 2022, 10:08 AM IST

சென்னை: சட்டப்பேரவையில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி பேசுகையில், ‘வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 2.13 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆளுநர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. தமிழர் நலன் சார்ந்த 211 கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடக்கிறது. அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காகத் தான் ஆளுநரின் செயல்பாடு இருக்க வேண்டும்.

வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆளுநருக்கு மாளிகை எதற்கு? ஆளுநர் மாளிகை என்றால் வனசட்டம் கைகட்டி நிற்குமா? என கேள்வி எழுப்பிய அவர் ஆளுநர் மாளிகை இருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆளுநருக்கு அமைச்சர்கள் வசிக்கும் பசுமை வழிச்சாலையில் குடியிருப்பை வழங்க வேண்டும் என முன்மொழிகிறேன். திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் 22 வனத்துறைக்குச் சொந்தமான சாலைகள் இருக்கிறது. பெரும்பாலான சாலைகளில் குப்பைகள் நிறையத் தேங்கிக் கிடக்கிறது, இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்கும் பொழுதுக் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு இடமில்லை என்கிறார்கள்.

அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதை விடச் சுற்றுச்சூழல் மீது அதிகாரிகளுக்கு போதுமான புரிதலின்மை காட்டுகிறது. அதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,

‘முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி குறிப்பிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மருத்துவ கழிவுகளைக் கையாள நடவடிக்கைகளைத் துரிதமாக அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: தேவாங்கு வன உயிரின சரணாலயம் அமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.