அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கலந்துகொண்டு மாநிலத்தில் கரோனா தாக்கத்தின் தற்போதைய நிலவரத்தை எடுத்துக்கூறி பேசினார்.
அப்போது பேசிய அவர், "உலக சுகாதார அமைப்பு கரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் கரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்.
பொருளாதாரத்தையும் சீராக வைத்துக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவர்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்