சென்னை: செங்கல்பட்டு தொகுதி திம்மாவரம் ஊராட்சியில் விளையாட்டுத் திடல் அமைக்கப்படுவது தொடர்பாக செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி எழுப்பிய கேள்விகளும், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அளித்த பதில்கள் குறித்தும் காணலாம்.
’செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி - கேள்வி: செங்கல்பட்டு தொகுதி திம்மாவரம் ஊராட்சியில் விளையாட்டுத் திடல் அமைக்க அரசு முன்வருமா?
விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் - பதில்: முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிதிநிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்.
செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி - கேள்வி: மறைமலை நகர் பகுதியில் நீச்சல் குளம் அமைக்கப்படுமா?
விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் - பதில்: அலுவலர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் - கேள்வி: சோளிங்கநல்லூர் பகுதியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். ஆக அந்த பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படுமா?
விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் - பதில்: நிதிநிலைக்கேற்ப முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலனை செய்யப்படும்’
இவ்வாறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற புகார்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு'