திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் நாளை (மார்ச் 5) காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021 - அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரங்கள் உடனுக்குடன்
21:46 March 05
திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை நீடிக்கிறது
21:45 March 05
மமக: இரண்டு தொகுதி - இரண்டு சின்னம்
- திமுக தொகுதியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
- தற்போது அதில் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
18:15 March 05
லட்சியம்தான் முக்கியம்; எண்ணிக்கை அல்ல - முத்தரசன்
- திமுக-சிபிஐ இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்தியக் கம்யூனிஸ்டுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது.
- அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்,"தேர்தல் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கையைவிட லட்சியம்தான் முக்கியமானது" எனக் கூறியுள்ளார்.
- இதுவரை திமுக கூட்டணியில் மொத்தமாக 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிகள் இன்னும் இறுதிச்செய்யாமல் உள்ளது.
17:31 March 05
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் உறுதி!
திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. முன்னதாக 11 தொகுதிகள் கொண்ட விருப்பப் பட்டியலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
16:54 March 05
பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் பாமக கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
16:34 March 05
அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு இழுபறி குறித்து பார்த்தசாரதி பேட்டி
அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு இழுபறி குறித்து குறித்து தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறிய தகவல்கள் கீழ்வருமாறு:
- அதிமுக கூட்டணியில் மட்டும்தான் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
- முதலில் 41 தொகுதிகளைக் கேட்டிருந்தோம்.
- பிற கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு அளிக்க வேண்டும் என்பதால் இழுபறி நீடித்தது.
- தற்போது 25 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம்.
- இரண்டு நாள்களுக்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும்.
15:29 March 05
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - பிரியங்கா காந்தி பெயரில் விருப்ப மனு!
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மறைந்த எம்பி ஹெச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்செய்துள்ள நிலையில், அதே தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி பெயரில், கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு தாக்கல்செய்துள்ளார்.
15:04 March 05
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
14:19 March 05
அவமானப்படுத்திய திமுக; கண்கலங்கிய கே.எஸ். அழகிரி!
திமுகவுடனான முதற்கட்டத் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் முன்னிலையில் திமுகவினர் தன்னை அவமரியாதை செய்துவிட்டதாகக் கூறி செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண் கலங்கினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
13:59 March 05
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அதிமுகவின் ஆட்சிமன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி இன்று 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், கே.பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், டி.ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும், எஸ்.பி. சண்முகம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், எஸ். தேன்மொழி நிலக்கோட்டை தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
13:14 March 05
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது?
அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின் முடிவில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13:07 March 05
மதிமுக 3ஆவது அணிக்கு செல்ல வாய்ப்பில்லை - வைகோ
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அமைத்திருக்கும் மூன்றாவது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் திமுக இன்னும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
12:21 March 05
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு, 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
11:19 March 05
சட்டப்பேரவை தேர்தல் 2021; மார்ச் 8ஆம் தேதி அமமுக நேர்காணல்!
அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு- புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அமமுக தலைமைக் கழகத்தில் சென்ற 3ஆம் தேதி முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருவோருக்கு வரும் 7ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படவிருக்கின்றன. அந்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து, விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.