சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்கியது. நீர்வளத் துறையின் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இதில் நீர்வளம் - நிலவளம் என்ற தலைப்பில், நீர்வளத்துறையின் சாதனைகள் - 2022 என்ற 260 பக்கங்கள் கொண்ட புத்தகமும், பேரவைக்கூட்டத்தின் முதல்நாள் இன்று என்பதால், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் மேஜைகளிலும் ரோஜாப்பூ வைக்கப்பட்டிருந்தது.
கேள்வி நேரத்திற்குப் பிறகு, முதலமைச்சர் 110-விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சொத்து வரி உயர்வு குறித்துப்பேசினார்.
இதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்துப்பேசினார். இதை ஏற்றுக் கொள்ளாத அதிமுக பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தது.
பின்னர் அதிமுக "சொத்து வரியை குறைத்திடு குறைத்திடு" என்று முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தளவாய் சுந்தரம், " சட்டப்பேரவை உறுப்பினர்களை வரவேற்க ரோஜா வைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரோஜா கொடுத்து சொத்து வரியை உயர்த்தி அரசு மக்கள் காதில் பூ சுற்றி விட்டது" எனக் கிண்டல் செய்தார்.
இதையும் படிங்க:மனமுவந்து சொத்துவரியை உயர்த்தவில்லை ஸ்டாலின்; வாக்களித்த மக்களுக்குப் பரிசாக சொத்து வரி உயர்வு - இது ஈபிஎஸ்!