ETV Bharat / city

உக்ரைனில் இருக்கும்  மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான  செலவை  அரசே ஏற்கும் –  முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டு மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த 5,000 மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உக்ரைனில் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்  தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்

author img

By

Published : Feb 25, 2022, 12:46 PM IST

Updated : Feb 25, 2022, 1:03 PM IST

ரஷ்ய இராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.

இச்சூழ்நிலையை அறிந்து, அவர்களை மீட்டுத் தமிழ்நாட்டிற்க்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் டெல்லி தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டுள்ளனர்.

இன்று பிப்ரவரி.25 காலை 10-00 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில தொடர்பு அலுவலரான திருமதி ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பு எண்கள்
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1070

திருமதி ஜெசிந்தா லாசரஸ், இஆப., ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம்
9445869848, 9600023645, 9940256444
044-28515288
மின்னஞ்சல் nrtchennai@gmail.com

உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுதில்லி.
வாட்ஸ்அப் எண் 9289516716
மின்னஞ்சல் ukrainetamils@gmail.com

இதையும் படிங்க: ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் 137 பேர் உயிரிழப்பு

Last Updated : Feb 25, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.