சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்.22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
முன்னசாக தேர்தலுக்கான பரப்புரையை வேட்பாளர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பரப்புரை நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளது.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிப்.19 பொதுவிடுமுறை