இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மாநில நீதித்துறை பணிகளில், உரிமையியல் நீதிபதி பதவிக்கு 171 காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த விண்ணப்பதாரர்களுக்கு 2019ஆம் ஆண்டு நவ.24ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதனை 7,942 பேர் எழுதினர். அவர்களில் தகுதிப் பெற்ற 239 தேர்வர்களுக்கு 2020ஆம் ஆண்டு அக்டோபர் 17,18 தேதிகளில் முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு உள்ளிட்டவை அடிப்படையில் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, தேர்வாணையப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வரும் பிப்ரவரி 8,9 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடைத்தாளை சரியாக பூர்த்தி செய்யாவிட்டால் மதிப்பெண்கள் குறைக்கப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு