சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பொதுநூலகங்களை திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, பாதிப்புகள் குறைந்த நிலையில், பகுதி பகுதியாக தளர்வுகளை அரசு அறிவித்தது.
இதையடுத்து அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட செயல்பட அனுமதிக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு, தொடர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு அலுவலகங்களை நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பொது நூலங்களை திங்கள்கிழமை முதல் திறக்க பொது நூலக இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த உத்தரவு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வாசகர்கள் நலனை கருதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செப்டம்பரில் நீட் தேர்வு- தமிழச்சி கேள்விக்கு அமைச்சர் பதில்!