சென்னை: கனடா தலைநகரில் 65வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவு நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து கனடா புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டின் 65வது கூட்டத்தொடர் கனடா நாட்டு தலைநகரில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்து வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
"இந்த கூட்டதொடரில் 187 நாடுகள் கலந்து கொள்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஜனநாயக முறையில் என் அரசு என்று இல்லாமல் நமது அரசு என எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செல்கின்ற பாங்கை அனைவரும் பாராட்டி உள்ளனர். இந்த கருத்துக்களை வாய்ப்பு கிடைத்தால் காமன்வெல்த் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிப்பேன்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை கடற்கரை பகுதிகளில் 50.9 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்