ETV Bharat / city

'பள்ளிகள் திறப்பு அரசின் கொள்கை முடிவு' - மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது அரசின் கொள்கை முடிவு என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதேபோல் தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் அதனைக் கடந்து தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Sep 27, 2021, 6:31 AM IST

Updated : Sep 27, 2021, 9:40 AM IST

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று (செப்டம்பர் 26) செய்தியாளரிடம் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று ((செப்டம்பர் 26) நடைபெற்றது.

இந்தத் தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அதனைக் கடந்து தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருவதால் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கிறோம்.

ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், அது ஆகஸ்ட் மாதம் 91.67 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதில் முதலமைச்சர் அதிக அக்கறை கொண்டுள்ளார்.

இன்று ஐந்து இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொண்டார்.

மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தலைமைச் செயலரும் தடுப்பூசி செலுத்தப்படுவதை நேரில் ஆய்வுசெய்தார். தமிழ்நாட்டில் இதுவரை அரசின் மூலம் 4.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதத்திற்குள் 18 வயதிற்குள்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாவது தவணை தடுப்பூசியையும் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கூறிவருகிறோம்.

தடுப்பூசி செலுத்தும் பணியில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், அவர்களுக்கு நாளை (செப்டம்பர் 27) தடுப்பூசி வழங்குவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை வழங்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறை நேரடியாகத் தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ளதை நானும் பார்த்தேன். ஆனால் இது குறித்து முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் ஆய்வுசெய்து கொள்கை முடிவு எடுத்துதான் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் இன்று 13.35 லட்சம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 8.72 லட்சம் பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 22.08 தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் தவணை 66 விழுக்காடு மக்களுக்கும், இரண்டாவது தவணை 22 விழுக்காடு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் முதியவர்களுக்கு 50 விழுக்காட்டிற்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: புதிதாக 1,694 பேருக்கு கரோனா உறுதி!

Last Updated : Sep 27, 2021, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.