மே தினத்தையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மே தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் அதில் தொழிலாள வர்க்கத்தின் பங்களிப்பை தேசம் வணங்குவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அவர்களின் பணி மற்றும் உழைப்பில் பெருமை கொள்ளும் சந்தர்ப்பமாக மே தினம் கொண்டாடப்படுகிறது.
‘மே தினத்தை’ முன்னிட்டு, தேசத்தின் நலனை மேம்படுத்துவதற்காக இரவும் பகலும் உழைக்கும் அனைவருக்கும், இந்த உன்னத முயற்சியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் நெருக்கடியை சமாளிப்பதற்கும் உறுதியான தீர்மானத்தை இந்த மே தினத்தில் எடுப்போம். தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க தேவையான சக்தி தொழிலாளர் சமூகத்திற்கு பலம் அளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
கோவிட்-19 தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்களை மிகக் கடுமையாக பின்பற்றி வீட்டிலேயே தமிழக மக்கள் அனைவரும் தங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.