ETV Bharat / city

மணிப்பூர் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள இல. கணேசனுக்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து - BJP

மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசனுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள இல. கணேசனுக்கு ஆளுநர் வாழ்த்து

author img

By

Published : Aug 22, 2021, 6:49 PM IST

தமிழ்நாடு பாஜகவின் மூத்தத் தலைவரான இல. கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

மணிப்பூர் ஆளுநராக இருந்துவந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் ஆகஸ்ட். 20ஆம் தேதிவரை நிறைவு பெற்றது. இதையடுத்து, சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத் கூடுதல் ஆளுநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவர் இல. கணேசன் மணிப்பூர் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதான் முதல் அனுபவம்

இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன் கூறியபோது, "பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, ஒரு அனுபவம் வாய்ந்த, பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த தொண்டனுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் பழக்கம் எப்பொழுதும் உண்டு.

அந்த வகையில் பிரதமர் எனக்கு உரிய முறையில் அங்கீகாரம் தந்திருக்கிறார். மணிப்பூர் ஆளுநராக என்னை தேர்வு செய்தமைக்காக குடியரசுத் தலைவருக்கு நன்றி. நான் மணிப்பூர், அஸ்ஸாம் பகுதிக்கு இதுவரை சென்றதில்லை.

குடியரசுத் தலைவருக்கு நன்றி
குடியரசுத் தலைவருக்கு நன்றி

இதுதான் முதல் அனுபவம். உணர்வுப்பூர்வமாக ஒரே நாடு என்று உணர்ந்திருக்கும் எனக்கு, அனுபவ ரீதியாக அந்த மக்கள் நம் மக்கள் என்று உணர்வதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

பாஜகவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, புதிய பணியில் சேர வேண்டும். கட்சியிலிருந்து நீங்குவது வருத்தமளிக்கும் நிகழ்வாக இருந்தாலும் கூட, ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு தேசப்பணியாவதால் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், மணிப்பூர் மக்களுக்குச் சிறப்பான முறையில் தொண்டாற்ற இருக்கிறேன்" என்றார்.

ஆளுநர் வாழ்த்து

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல. கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தபோது, "மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இல. கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர்

இல. கணேசனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மணிப்பூர் மக்களுக்கு தொண்டாற்றவும், பணி சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். மணிப்பூரில் அமைதியான மற்றும் வெற்றிகரமான ஆட்சி அமைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: '5 வயதிலே ஆர்எஸ்எஸ் பயிற்சி... மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசனின் கதை!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.