ETV Bharat / city

கரோனா நிவாரணத் தொகை: உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணை - tamil nadu government website

கரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்களுக்கு 50,000 ரூபாயை அரசு வழங்குவது தொடர்பாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பணத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

tamil nadu government gives corona relief fund
தமிழ்நாடு அரசு ஆணை
author img

By

Published : Dec 8, 2021, 12:41 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் 'வாட்ஸ் நியூ (what's new)' பகுதியில் 'Ex-Gratia for Covid-19' என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பைத் தேர்வுசெய்து, ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க ரூ.182 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கரோனா தொற்றால் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கும் தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், 50,000 ரூபாய் நிவாரணம் கோரி விண்ணப்பிக்கும்போது உடனடியாகப் பரிசீலனை செய்ய அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 710 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.