ETV Bharat / city

கரோனா தொற்று பரவல்: புதிய கட்டுப்பாடுகள் அறிவித்த தமிழ்நாடு அரசு! - ஊரடங்கு உத்தரவு

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
Tamil Nadu government
author img

By

Published : May 4, 2021, 12:19 AM IST

கரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இக்கட்டுப்பாடுகள் வரும் மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியதாவது;

* ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.

* இரவு நேரத்தில் முழு ஊரடங்கு ( இரவு 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை)

* அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டும் பணி செய்ய அனுமதி.

* பயணியர் இரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்து, தனியார் பேருந்து ஆகியவற்றில் 50 விழுக்காடு பயணிகள் மட்டுமே அனுமதி.

* 3000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய கடைகளுக்குத் தடை.

* இறைச்சிக் கடைகள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி.

* கொடைக்கானல், ஊட்டி, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களைப் பொதுமக்கள் பார்வையிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் (Recreation Clubs), அனைத்து மதுக்கூடங்கள் (All Bars), பெரிய அரங்குகள் (Auditoriums) , கூட்ட அரங்குகள் (Meeting Halls) போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள் ( Big format Shops ), வணிக வளாகங்கள் ( Shopping Complex & Malls ) இயங்க அனுமதி இல்லை.

* மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாகச் செயல்படுகின்ற மளிகை உட்படப் பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் ( Departmental stores) குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

* சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் , அழகு நிலையங்கள், முடிதிருத்தகங்கள் ( Beauty Parlour , Spas , Saloons , Barber shops ) இயங்க அனுமதி இல்லை.

* அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் ( Restaurants / Hotels / Mess and Tea Shops ) பார்சல் சேவை ( Take away service ) மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை, தேநீர்க் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி.

* விடுதிகளில் ( Hotels and Lodges ) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

* அனைத்து மின் வணிக சேவைகள் ( e - commerce ) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் ( IT & ITES companies ) குறைந்த பட்சம் 50 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய ( Work from Home ) வேண்டும்.

* கோல்ஃப் , டென்னிஸ் கிளப் ( club ) உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் ( sports training academy ) செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

இரவு நேரம் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலத்தில் இவற்றுக்கு அனுமதி

* மருத்துவமனைகள், மருந்தகங்கள், உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துறைகளுக்கும் பெட்ரோல் பங்க், உள்ளிட்டவற்றுக்கு அனுமதி.

* மெட்ரோ ரயில் தேவைக்கேற்ப அனுமதி.

* மருத்துவ தேவைக்காக ஆட்டோ மற்றும் வாகனங்கள் அனுமதி, எல்பிஜி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு அனுமதி. வழங்கப்பட்டுள்ளது.

இ பாஸ் கட்டாயம்

* புதுச்சேரி தவிர்த்து , ஆந்திரப்பிரதேசம் , கர்நாடகா , கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த ( e - registration ) விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

* வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைத்தளத்தில் பதிவு செய்த ( e - registration ) விவரத்தினை காண்பித்த பின்னரே தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது அனுமதிக்கப்படுவர்.

* தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் , இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் . பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

*பணிக்குச் செல்லும் பணியாளர்கள் , பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையைத் தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி, கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வதையும், தகுந்த இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து, அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் .

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறேன்...கவலை வேண்டாம் : அல்லு அர்ஜுன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.