சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 307 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் புதிதாக ஆயிரத்து 9 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்து 899 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் 27 லட்சத்து 2 ஆயிரத்து 623 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,183 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 26 லட்சத்து 55 ஆயிரத்து 15 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
தனியார் மருத்துமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 14 நோயாளிகளும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 554672
- கோயம்புத்தூர் - 246780
- செங்கல்பட்டு - 171777
- திருவள்ளூர் - 119370
- ஈரோடு - 104303
- சேலம் - 99893
- திருப்பூர் - 95405
- திருச்சிராப்பள்ளி - 77534
- மதுரை - 75215
- காஞ்சிபுரம் - 74970
- தஞ்சாவூர் - 75352
- கடலூர் - 64085
- கன்னியாகுமரி - 62362
- தூத்துக்குடி - 56304
- திருவண்ணாமலை - 54968
- நாமக்கல் - 52245
- வேலூர் - 49864
- திருநெல்வேலி - 49374
- விருதுநகர் - 46294
- விழுப்புரம் - 45857
- தேனி - 43571
- ராணிப்பேட்டை - 43436
- கிருஷ்ணகிரி - 43570
- திருவாரூர் - 41461
- திண்டுக்கல் - 33099
- நீலகிரி - 33566
- கள்ளக்குறிச்சி - 31364
- புதுக்கோட்டை - 30183
- திருப்பத்தூர் - 29301
- தென்காசி - 27357
- தர்மபுரி - 28425
- கரூர் - 24091
- மயிலாடுதுறை - 23280
- ராமநாதபுரம் - 20564
- நாகப்பட்டினம் - 21074
- சிவகங்கை - 20195
- அரியலூர் - 16854
- பெரம்பலூர் - 12067
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1028
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428