தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Bewell என்ற தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு 19 நாள்கள் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு கட்டணமாக 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதவிர, பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் அதிக கட்டணம் வசூவிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
-
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
">கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 2, 2020
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 2, 2020
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் Bewell தனியார் மருத்துவமனைக்கு, கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் மக்களவை உறுப்பினர்!