ETV Bharat / city

லேட்டாகவும் லாஸ்ட்டாகவும் கோவின் தளத்தில் வந்த 'தமிழ்' - சு வெங்கடேசன்

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின், ஒன்றிய அரசின் 'கோவின்' தடுப்பூசி இணையதளத்தில் 'தமிழ்' மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

லேட்டாகவும் லாஸ்ட்டாகவும் கோவின் தளத்தில் வந்த 'தமிழ்'

author img

By

Published : Jun 9, 2021, 8:38 AM IST

Updated : Jun 9, 2021, 9:02 AM IST

சென்னை: ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி, ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக ஒன்பது பிராந்திய மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தொன்மையான செம்மொழி 'தமிழ்' அதில் சேர்க்கப்படவில்லை. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என, ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

வலியுறுத்தலும், பதிலும்

இதன்படி, இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். முன்னதாக, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தினை பதிவுச் செய்திருந்தார்.

இதன்பின்னர், விரைவில் தமிழ் மொழி இணையதளத்தில் சேர்க்கப்படும் என ஒன்றிய அரசின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

Tamil language added in cowin vaccination registration website, கோவின் இணையதளத்தில் தமிழ், தமிழ் மொழி, முக ஸ்டாலின், ஸ்டாலின், கோவின் இணையதளத்தில் இடம்பெற்றது தமிழ், cowin website, tamil language in cowin website, cowin website, su venkateshan, சு வெங்கடேசன், லேட்டாகவும் லாஸ்டாகவும் கோவின் தளத்தில் தமிழ்
கோவின் இணையதளத்தில் லேட்டாகவும் லாஸ்ட்டாகவும் தமிழ்

வந்தது தமிழ்

இந்நிலையில், 'கோவின்' இணையதளத்தில் 12ஆவது மொழியாக 'தமிழ்' மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளோடு மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகளுடன் தமிழ் மொழி கடைசியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 44 கோடி கரோனா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: ஒன்றிய அரசு உத்தரவு

Last Updated : Jun 9, 2021, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.