ETV Bharat / city

சென்னையில் லாரி கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு - சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு

தாம்பரம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

சாலையோரம் பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்து

author img

By

Published : Sep 30, 2022, 4:28 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த எருமையூர் செக்போஸ்டட் வழியாக ஆந்திரா மாநிலம் கடப்பாவிலிருந்து கடப்பா கல் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது முடிச்சூர் அருகே லாரி வந்தபோது முன் பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனால் லாரியின் மேல் அமர்ந்திருந்த சிவா ரெட்டி, வரதராஜூ இருவரும் கடப்பா கல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியின் உள்ளே அமர்ந்திருந்த ஓட்டுநர் லட்சுமணய்யா(36), அவரது மகன் வாசு, மற்றும் சுப்பா நாயுடு(50) ஆகியோர் பலத்த காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடப்பா கல்லில் சிக்கி உயிரிழந்த இருவரது உடலும் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற சகோதரிகள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.