சென்னை: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தான் பாடியுள்ள பாடல் குறித்து நடிகர் டி.ராஜேந்தர் இன்று(ஏப்ரல்.25) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இப்பாடலை அஸ்மின் எழுத, சமீல் இசை அமைத்துள்ளார். அப்போது பேசிய டி.ராஜேந்தர், “இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் நமது தொப்புள் கொடி உறவுகள் துயரத்தில் ஆழ்ந்துகொண்டு இருக்கிறது என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.
அதன்காரணமாக மக்கள் படும்பாட்டை பார்த்துவிட்டு, இந்தியாவிற்குத் தரவேண்டிய கடனைக்கூட தரவேண்டாம் என்று இந்திய அரசு கூறியிருக்கிறது. தொடர்ந்து மனிதநேயத்தோடு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது. பால் இன்றி குழந்தைகள் பாடுபடுகின்றனர். ராஜபக்ச செய்த துரோகத்துக்கு தற்போது அனுபவித்து வருகிறார்.
முள்ளி வாய்க்காலிலே தமிழ் மக்களுக்கு ராஜபக்ச செய்த கொடுமைக்கு, பாவத்துக்குத் தான் இந்த தண்டனை கிடைத்துள்ளது.இரக்கமற்ற அரக்கர் ஆட்சி, கொடுங்கோலர் ஆட்சி இனியும் தொடரக்கூடாது. மொத்தம் 3.9 பில்லியன் அமெரிக்க டாலரை, இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியதற்கு நன்றி.
விவசாயிகளுக்கு முழுமையாக இந்திய அரசு வரிச்சலுகை அளிக்கவேண்டும். மெரினாவில் முன்னாள் முதலமைச்சராகத் தான் கருணாநிதி உறங்குகிறார். முதலமைச்சராக இல்லை. காரணம் காங்கிரஸ் உடன் கைகோர்த்த பாவம்’ என்றார்.
இதையும் படிங்க: பெரியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை - நடிகர் சிவக்குமார்