ETV Bharat / city

ராம்குமார் மரண வழக்கு - புழல் சிறை அலுவலர்களுக்கு சம்மன் - சுவாதி கொலை வழக்கு

சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் உயிரிழந்த விவகாரத்தில் புழல் சிறை அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

case
case
author img

By

Published : Sep 11, 2020, 3:31 PM IST

2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி மென் பொறியாளர் சுவாதி, அலுவலகம் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவரால் ரயில் நிலையத்திலேயே சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு குறித்து முதற்கட்ட விசாரணை செய்த ரயில் நிலைய காவல்துறையினர், பின்னர் நுங்கம்பாக்கம் காவல்துறையினரிடம் வழக்கை ஒப்படைத்தனர்.

இதில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகுந்த சிரமம் இருந்ததால், ரயில் நிலையம் அருகில் இருந்த வீடுகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதியில் தங்கி வேலை செய்து வந்த, நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், சுவாதியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மீனாட்சிபுரம் சென்ற காவல்துறையினர், இரவில் ராம்குமாரை கைது செய்ய முயற்சித்த போது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை முடிவில் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது புழல் சிறையிலேயே மின்சார கம்பிகளை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனக் காவல்துறை தெரிவித்தது. ஆனால், இதனை மறுத்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை பார்ப்பதற்கு அனுமதி மறுத்ததாகவும், ராம்குமாரின் உறவினர்கள் மருத்துவமனை வாசலிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட செய்தி வெளியாகி அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் ராம்குமார் மரண வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணையம், இது குறித்து விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், விசாரணையின் அடுத்தக்கட்டமாக, புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி , தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோர், இம்மாதம் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பி, ஆணையத்தின் பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல மாலில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.