ETV Bharat / city

சசிகலா உறவினர் வீட்டை இடிக்க தடை விதிக்க மறுப்பு

சென்னை: சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனுக்கு சொந்தமான நீலாங்கரை வீட்டை இடிக்க, சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சசிகலா உறவினர் வீட்டை இடிக்க தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

author img

By

Published : Feb 29, 2020, 3:08 AM IST

சென்னை ஈஞ்சம்பாக்கம் முதல் உத்தண்டி வரையில் கிழக்கு கடற்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள, சட்டவிரோதமாக கட்டடங்களை இடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்தப் பகுதியில் சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனுக்கு சொந்தமான கட்டடம் ஒன்றும் உள்ளது. இதுவும் விதிமீறி கட்டப்பட்டுள்ளது.

இதனை இடிக்க சென்னை மாநகராட்சி ஜனவரி 28ஆம் தேதி நோட்டீஸ் (அறிவிப்பு) வழங்கியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.எம்.டி. டீக்காராமன் அடங்கிய அமர்வு, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

அதேசமயம், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க...மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.