ETV Bharat / city

கேந்திரிய வித்யாலயாவில் கட்டண வசூல்? - சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் - கேந்திரிய வித்யாலயாவில் கட்டண வசூல்

மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆனால் கல்விக் கட்டணத்தை அதற்கு நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.

Su Venkatesan
Su Venkatesan
author img

By

Published : Aug 23, 2021, 9:22 PM IST

மதுரை : மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிலையில், கல்விக் கட்டணத்தை அதற்கு நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா என கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து ஒன்றிய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்பி கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஆக.23) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “10ஆம் வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021ஆம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021இல் தான் அறிவிக்கப்பட்டன.

venkatesan
கேந்திரிய வித்யாலயாவில் கட்டண வசூல்?

அதற்கு பின்னர் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடக்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கப்பட்டது. ஆனால் 11ஆவது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றரை மாதத்திற்கும் சேர்த்து ரூ 3150 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்தே கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பில் சேராத காலத்தில் டியூசன் கட்டணம் 1200, வித்யாலயா விகாஸ் நிதி 1500, கணினி கட்டணம் 300, கணினி அறிவியல் கட்டணம் ரூ 150 என வசூலிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சில பெற்றோர் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். வகுப்புகள், கல்வி நடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்திற்கு கட்டணம் என்பது முறையல்ல. பெற்றோரின் புகார் முற்றிலும் நியாயமானது.

ஆகவே இதில் தலையிட்டு வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும், இல்லாவிடில் எதிர்கால கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ‘2024ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வலியுறுத்துவோம்’ - சு. வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.